எதிர்க்கட்சித் தலைவர் எமது கருத்துக்களை ஆர்வத்துடன் செவிமடுக்கவில்லை!
விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதிகள் இருவர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் சந்தித்தனர்.
ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராஜா ஜெனீவன் மற்றும் கோமகன் ஆகியோரே எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் மருத்துவ ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் குறித்த இருவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் தமது கருத்துக்களை ஆர்வத்துடன் செவிமடுக்காமை கவலையளிப்பதாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கோமகன் கூறினார்.








