Breaking News

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் இரு வாரங்களில் அறிவிப்பு! இரா.சம்பந்தன்

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் இரு வாரங்களில் அறிவிப்பு ஒன்றினை விடுவோம் . சிறையில் இருந்து அண்மையில் விடுதலை பெற்றகோமகன், ஜெனிபனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளாக தொடர்ந்தும் சிறையில் வாடும் கைதிகளின் உடனடி விடயம் தொடர்பில் கைதிகளாக இருந்து அண்மையில் விடுதலை பெற்ற ஜெனிபன் மற்றும் கோமகன் ஆகியோர் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.


அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சணைகள் தொடர்பில் கடந்த 26ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவானிடம் ஓர் மனுவினை மேற்படி இருவரும் கையளித்திருந்தனர். குறித்த மனுவில் உள்ள விடயங்கள் தொடர்பாககட்சித் தலைவருடன் கலந்துரையாட ஓர் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.


அதன்பிரகாரம் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. இச் சந்திப்பின்போது கைதிகளின் விடுதலையில் ஏற்படும் தாமதம் . தற்போது கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இடங்களில் மருத்துவ வசதிகள் இன்மை இதனால் பாரிய நோய்த்தாக்கம் பற்றிய விடயங்களும் பேசப்பட்டன.


இதற்கு தாம்பட்ட அனுபத்தினையே இருவரும் எடுத்துக் கூறினர். உடனடி வைத்தியம் இன்மையால் மரணம்கூட சம்பவிக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டினர்.


.இவற்றிற்கு பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் முன்பிருந்த கைதிகளில் குறிப்பிட்டளவானோர் சிறையில் இருந்து வெளிவந்தபோதும் பலர் சிறைகளில் உள்ளனர். ஜெனிபனை விடமுடியுமெனில் ஏனையோரும் விடுவிக்கப்பட வேண்டும். அதற்காக தொடர்ந்தும் முயற்சிப்போம் . எதிர் வரும் இரு வாரங்களில் இது தொடர்பில் ஓர் அறிவிப்பும் வெளியிடப்படும்.


கைதிகள்சிறைகளில் படும் அவலத்தைக் கருத்தில் கொண்டு மேலும் சிலரை புனர்வாழ்வு மூலமாக விடுவிக்க முயன்ற வேளையில் சிலர்குழப்பி விட்டனர் என சுட்டிக்காட்டினார்.இதன்போது குழப்பியவர்கள் அரசியல்கைதிகள் அல்ல சில சட்டத்தரணிகளே தற்போதும் கைதிகள் சார்பிலேயே உங்களைச் சந்திக்கின்றோம் என தெரிவித்தனர்