Breaking News

உரிமைகளைப் பெற தமிழ், முஸ்லிம் ஒற்றுமை அவசியம்

இலங்கையில் தமிழ் மொழியை பேசும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே அதிகாரப் பகிர்வு உட்பட அனைத்து உரிமைகளையும் பெறமுடியும் என சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதிகாரப் பகிர்வை வென்றெடுப்பதற்கு தமிழர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் முஸ்லிம்கள் மத்தியிலும் இருக்க வேண்டும் என அவர் வேண்டியுள்ளார். 

புதிய அரசியல் யாப்பின் மூலம் கிடைக்கும் அதிகாரப் பகிர்வில் வடக்கு மற்றும் கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு எனவும் அவர் கூறுகிறார். கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற நிலைப்பாட்டிற்கு எதிராக அண்மையில் குரல் கொடுத்து வருவதை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், அவர்கள் அரசியல் இலாபம் கொண்டு செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார். 

அரசியல் இலாபம் கருதி இவ்வாறான கருத்துக்களை அவர்கள் வெளியிடுவதை தவர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.