பேஸ்புக்கில் வாழ்த்துத் தெரிவித்த மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தின் ஊடாக தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘உங்கள் அனைவருக்கும் சாந்தி, மகிழ்ச்சி, செல்வம் மிக்க ஆண்டாக மலர வேண்டுமென வேண்டிக் கொள்ளகின்றேன்.
மேலும், முழு நாடும் ஒரே சுப முகூர்த்தத்தில் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வேலை செய்வதற்கு எங்களுடைய புது வருடம் போல் உலகில் எங்கும் இல்லை என நான் நினைகிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.








