இராணுவத்திற்கு எதிராக போராடுவதற்கு முல்லைத்தீவு மக்கள் தீர்மானம்
தமது காணிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசிற்கும் இராணுவத்திற்கும் எதிராக போராடுவதற்கு முல்லைத்தீவு மக்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விஸ்வமடு, நாயாறு பிரதேசங்களில் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனை மக்கள் நேற்று சந்தித்திருந்தனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் அரசிற்கும், இராணுவத்திற்கும் எதிராக போராடுவதை தவிர வேறு வழியில்லை என பொதுமக்கள் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதுடன், எமது உரிமைகளை கோரி அகிம்சை வழியில் போராடுவதற்கும் மக்கள் தீர்மானித்துள்ளனர்.