Breaking News

அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட கிருலப்பணைக்கு வாருங்கள்- பசில்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட கிருலப்பணைக்கு வாருங்கள் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கரன்தெனிய பிரதேசத்தில்நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்… அனைத்து வரிகளுக்கும் எதிர்ப்பை வெளியிடும் தரப்பினர் இம்முறை மே தினத்தின் போது கிருலப்பணை மே தினக் கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள்.

அத்தியாவசிய பொருட்களுக்கு வரி அறவிடப்படாது என அன்றும் கூறினார்கள் இன்றும் கூறுகின்றார்கள். எனினும் அந்த வரி விதிக்கப்படாத அத்தியாவசிய பொருட்கள் எவை என்பது கூறப்படவில்லை.

தற்போது எமது படைவீரர்கள் எமது சகோதர சகோதரியர் உயிர் தியகாத்துடன் பாதுகாத்து வந்த ஒருமைப்பாட்டில் சர்ச்சை எழுந்துள்ளது.

ஏதேனும் வகையில் நாட்டின் இறைமைக்கும் சுயாதீனதன்மைக்கும் குந்தகம் ஏற்படுமாயின் அது தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட, கிருலப்பணை கூட்டத்திற்கு வாருங்கள்.

இதுவரையில் மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள் வாகன ரத பவணியாக கிருலப்பணை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.