Breaking News

பயங்கரவாதம் தலை தூக்க ஒரு போதும் இடமளிக்கப்படாது - ருவான்

நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்க ஒரு போதும் இடமளிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் புத்தி ஜீவிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன இதனை தெரிவித்தார்.

நாட்டுக்குள் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி, எதிரணியினர் புதிய பிரச்சினைகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.அரசாங்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.