Breaking News

இலங்கையில் பிடிப்பட்ட ஹெராயின் மதிப்பு 75 லட்சம் டொலர்

இலங்கையின் தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 75 லட்சம் டாலர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தப் போதைப் பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய கப்பல், இரானியர்களுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த கும்பலே, இந்தக் கடத்தலுக்கான திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மடக்கிப் பிடிக்கப்பட்ட அந்தக் கப்பலில் இருந்து 101 கிலோ கிராம் ஹெராயின் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது.

இதனைக் கடத்த முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் பத்து இரானியர்களும், பாகிஸ்தானியர் ஒருவருமாக 11 பேரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.