இராணுவ நினைவு தின விழாவுக்கு மஹிந்த, கோட்டா இல்லை
பத்தரமுல்லையில் இம்மாதம் 18 ஆம் திகதி இடம்பெறும் இராணுவ நினைவு தின வைபவத்தில் தற்போதைய அரசின் தலைவர்கள் மாத்திரமே பங்குபற்றுவதாக இராணுவ சேவைகள் அதிகார சபையின் தலைவர் அனோம பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேசிய இராணுவ நினைவு நிகழ்வு நடாத்தப்படும் சம்பிரதாயம் இதுவாகும் என்பதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் குறித்த நிகழ்வுக்கு பங்குபற்ற மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே அனோம பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தற்போதைய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யுத்தத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








