கூட்டு எதிர்க்கட்சியில் சிலர் கூட்டமைப்பில் இணைய இணக்கம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பபில் இணைந்துகொள்ள இணங்கியுள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். கட்சியை பிளவுபடுத்த அதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரமே இந்த கலந்துரையாடல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.








