Breaking News

கனமழையினால் கிளிநொச்சியில் 7249 பேர் பாதிப்பு



கிளிநொச்சி .மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் சுமார் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார்274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர்இடம் பெயர்ந்த நிலையில் அவர்கள் ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். என கிளிநொச்சி.மாவட்ட அனர்த் முகாமைத்துவ பிரிவு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

கடந்த இரண்டு தினங்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக உருவாகியுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக இன்றைய தினம் மாலை 5 மணிக்கு கிடைக்கப் பெற்ற ளிநொச்சி.மாவட்ட அனர்த் முகாமைத்துவ பிரிவு புள்ளி விபரங்களே இவ்வாறு தெரிவிக்கின்றன

இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் கரச்சி மற்றும் கண்டாவளையை சேர்ந்தவர்கள் எனவும் கராச்சியை சேர்ந்த 49 குடும்பங்களை சேர்ந்த152 பேர் மருதநகர் பொதுநோக்கு மண்டபம் மற்றும் தாரணி குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்கி இருப்பதாகவும் கண்டாவளையை சேர்ந்த 26 குடும்பங்களை சேர்ந்த90 பேர் சிவபுரம் முன்பள்ளி புன்னைநிராவி பொது மண்டபம் மற்றும் நாதன்குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு வீடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்.106 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது