சீரற்ற காலநிலை! இருவர் பலி : 422 பேர் இடம்பெயர்வு : 7090 பேர் பாதிப்பு.!
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளார். இதேவேளை, 1871 குடும்பங்களைச் சேர்ந்த 7090 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், 97 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் மூன்று வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 8.30 முதல் மாலை 5.30 வரையிலான காலப்பகுதிக்குள், அதிகூடிய மழைவீழ்ச்சியாக கட்டுநாயக்கவில் 137.7 மில்லிமீற்றரும், திருகோணமலையில், 125.7 மில்லிமீற்றரும், குருநாகலில் 117.2 மில்லிமீற்றரும் கொழும்பில் 106.9 மில்லிமீற்றரும் பதிவாகியுள்ளது.
குறைந்தளவான மழைவீழ்ச்சி 1.7 மில்லிமீற்றராக யாழ்ப்பாணத்திலேயே பதிவாகியுள்ளது.








