Breaking News

ராஜபக்ஷாக்களின் வண்டவாளம் அடுத்த ஓரிரு தினங்களில் வெளிவரும்- சம்பிக்க



இன்னும் ஓரிரு நாட்களில் ராஜபக்ஷாக்கல் மேற்கொண்ட பல கோடிக்கணக்கான நிதி மோஷடிகள் பற்றிய தகவல் வெளிவரும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

ராஜபக்ஷாக்கள் ஒரு சதம் மோஷயில் ஈடுபட்டிருந்தாலும் தனது கழுத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என அக்காலத்தில் பெருமையாகக் கூறின்கொண்டனர்.

இவர்கள் வங்கிகளிலிருந்து எவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது பற்றிய தகவல்கள் அடுத்த ஓரிரு தினங்களில் வெளிவரும் போது அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.