தமிழர் காணி அபகரிப்பிற்கு எதிராக வெள்ளியன்று சபையில் பிரேரணை
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காணி அபகரிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் ஒன்றை கொண்டுவர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொண்டுவரவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்தும் படையினரால் அபகரிக்கப்பட்ட தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை என வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த காலத்திலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன், தற்போதும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காணி அபகரிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் ஒன்றை கொண்டுவர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.








