Breaking News

வடக்கின் சமஷ்டி தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை!


வடக்கு மாகா­ணத்தில் சமஷ்டி தீர்­வினை வலி­யு­றுத்தி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம் குறித்து அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை. இலங்கை ஒற்­றை­யாட்சி முறை­மையை கொண்ட நாடாகும். ஆகையால் மாகாண சபை­க­ளினால் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்­க­ளினால் எந்­த­வொரு அழுத்­தமும் பிர­யோ­கிக்க முடி­யாது. மாகாண சபை­க­ளுக்கு அந்த அதி­காரம் கிடை­யாது என வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

வடக்கு மாகாணம் சமஷ்டி கோரி­ய­தற்­காக அர­சாங்கம் அதனை வழங்­கு­வ­தற்கு தயா­ரில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒற்­றை­யாட்­சிக்குள் நிச்­ச­ய­மாக தீர்வு காண ­மு­டி யும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அம்­பாந்­தோட்டை நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் பிரே­ம­தாஸ மேலும் உரை­யாற்­று­கையில்,

வடக்கு மாகா­ணத்தில் சமஷ்டி தீர்­வினை வலி­யு­றுத்தி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை வைத்து அர­சியல் செய்­கின்­றனர். வடக்கு மாகா­ணத்தில் நிறை­வேற்றிய தீர்­மானம் தொடர்பில் அலட்­டிக்­கொள்ள தேவை­யில்லை. இலங்கை ஒற்­றை­யாட்சி முறை­மையை கொண்ட நாடாகும். ஆகையால் மாகாண சபை­க­ளினால் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்­க­ளினால் எந்­த­வொரு அழுத்­தமும் பிர­யோ­கிக்க முடி­யாது. மாகாண சபை­க­ளுக்கு அந்த அதி­காரம் கிடை­யாது.

எவ்­வா­றா­யினும் பொது எதி­ர­ணி­யினர் நாட்டு மக்­களை திசை திருப்பும் வகையில் தொடர்ந்தும் செயற்­ப­டு­கின்­றனர். வடக்கு மாகாணம் சமஷ்டி கோரியதற்காக அதனை வழங்குவதற்கு நாம் தயாரில்லை. நாட்டுக்கு பாதகமான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க மாட்டோம். இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் நிச்சயமாக தீர்வு காணமுடியும். அனைத்து இனத்தவர்களின் புரிந்துணர்வுடன் தீர்வினை காண்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம் என்றார்.