Breaking News

ஜனா­தி­பதி இன்று பிரித்­தா­னியா விஜயம்



ஊழல் ஒழிப்பு தொடர்பில் உலக நாடு­களின் தலை­வர்கள் பங்­கு­பற்றும் சர்­வ­தேச மாநாட்டில் கலந்துகொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இரு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு இன்று பிரித்­தா­னி­யா­விற்கு செல்­கின்றார்.

நாளை மறுநாள் வியா­ழக்­க­ழமை இடம்­பெ­ற­வுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்­பி­லான சர்­வ­தேச மாநாட்டில் இலங்கை உள்­ளிட்ட சர்­வ­தேச நாடுகள் பல கலந்து கொள்­ள­வுள்­ளன.

அந்­த­வ­கையில் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெம­ரூனின் அழைப்பின் பேரில் பிரித்­தா­னியா செல்லும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள் நாட்டில் ஊழலை கட்­டுப்­ப­டுத்த தேவை­யான நிபு­ணத்­துவ ஒத்­து­ழைப்­பு­களை பிரித்­தா­னி­யா­விடம் கோருவார் என எதிர் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க ஊழல் ஒழிப்பில் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டவும் பொது­வான பிரச்­ச­ணை­களின் போது சகோ­த­ரத்­து­வத்­துடன் நேச நாடு­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கவும் இந்த மாநாட்டின் போது இணக்­கப்­பா­டுகள் ஏற்­ப­டுத்திக் கொள்­ள­வுள்­ள­தாக பிரித்­தா­னிய பிர­தமர் அலு­வ­லகம் வெளி அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் மற்றும் வறுமை உள்­ளிட்ட விட­யங்­களில் நேச நாடுகள் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டி­யதன் தேவை தொடர்பில் இந்த மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் வலியுறுத்த உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.