ஆர்.கே.நகரில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியான ஆர்.கே.நகரில் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் பெரிதாக எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் இல்லாமல் நேற்று சுமூகமாக தமிழக தேர்தல் 232 தொகுதிகளில் நடந்து முடிந்தது. 7 மணி வரை 73.76 சதவீத வாக்குகள் பதிவாகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை அழிவதால் போலி மை பயன்படுத்தப்பட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் 8 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த விடுதலை சிறுத்தை வேட்பாளர் வசந்தி தேவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.








