Breaking News

பேரவையின் உபகுழு 18ம் திகதி பணிகளை ஆரம்பிக்கிறது!

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த மாதம் முதல் அந்தக்குழு தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.வடமாகாண சபையினால் எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமே பேரவையின் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்த உபகுழுவில் உள்ளடக்கப்படவுள்ள சர்வதேச நிபுணர்கள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பேரவை தரப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.