Breaking News

வவுனியா பஸ் நிலையத்தில் முதியவரின் சடலம் மீட்பு


வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை  அடையாளம் காணப்படாத வயோதிபரின் சடலம் ஒன்று வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.00 மணிக்கு பத்திரிகை விற்கும் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் வயோதிபரின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கும் கடைக்காரர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்கவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இறந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் அவர் பிச்சைக்காரனாக இருக்ககூடும் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.