வவுனியாவில் பிரபல வர்த்தகர் கடத்தல்! - வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை
வவுனியாவில் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவிலுள்ள பிரபல அரிசியாலையான எஸ்.எஸ். ஆர் அரிசி ஆலையின் உரிமையாளரான சண்முகம் செல்வராசா என்ற நபரே கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரிசி ஆலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிந்த சந்தர்ப்பத்திலேயே வீட்டிலிருந்து 10 மீற்றர் தொலைவில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை 7.15 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








