Breaking News

கச்சதீவை மீண்டும் பெறுவதாக ஜெயலலிதா சட்ட சபையில் வாக்குறுதி



கச்சதீவை மீண்டும் இந்தியாவுக்குப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழக பாராளுமன்றத்தில் அறிவிப்புச் செய்துள்ளார்.

டீ.எம்.கே. கட்சி கடந்த 20 வருடங்களாக தூங்கிக் கொண்டிருந்ததாகவும் தற்பொழுது கச்சதீவுப் பிரச்சினை தமிழக பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் கைச்சாத்தாகிய உடன்படிக்கைகளில் கச்சதீவு இலங்கைக்கு உரிமையிடப்பட்டுள்ளதாகவும், தான் இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.