Breaking News

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம்: இன்றும் விவாதம்,நாளை வாக்கெடுப்பு



தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பில் இன்றும், நாளையும் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய இன்று முற்பகல் விவாதம் ஆரம்பமாகி முழுநாளும் நடைபெறும் என்பதோடு நாளை வெள்ளிக்கிழமை மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இவ்விரண்டு தினங்களிலும் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.