Breaking News

யுத்த மீறல் விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இல்லை- அரசாங்கம்



வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வடக்கிலுள்ள சிவில் அமைப்புக்கள் என்பவற்றினால் முன்வைக்கப்பட்டுள்ள சகல கோரிக்கைகளையும் புறக்கணிக்கும் வகையில் வன்னி இறுதி யுத்த காலகட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணை இந்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே நடாத்தப்படும் என இராணுவ உயர் அதிகாரிகளிடம் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் பதவியிலுள்ளவர்கள் முதல் கேர்ணல்கள் வரை உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மாநாடு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில், அதன் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் ஹுஸைன் இலங்கை தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் தேவை எனக் கூறியிருந்தனர். இந்த தேசிய விசாரணைகளின் போது முன்னாள் புலிகள் அமைப்பின் பெண் உறுப்பினர் தமிழினி முன்வைத்த கருத்துக்களும் முன்வைக்கப்படவுள்ளதாகவும் இன்றைய சிங்கள தேசிய பத்திரிகையொன்று அறிவித்துள்ளது.