எதிர்ப்புகள் எழுந்தாலும் ஜெயலலிதாவை சந்திப்பது உறுதி - வடக்கு முதல்வர்
தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படும் முன்னர் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதால், எதிர்ப்புக்களை சமாளித்து அவரை சந்திக்கவுள்ளதாக புன்முறுவலுடன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பதற்கு எப்போது செல்கின்றீர்கள் என முதலமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இருவரும் சந்திப்பதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதாக இருந்தால் டெல்லியில் அனுமதியைப் பெறவேண்டும். இல்லாவிட்டால், அது சட்டத்திற்கு புறம்பானது என சிலர் தெரிவித்துள்ளார்கள்.
தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான நாள் இதுவரையில் தீரமானிக்கப்படவிலலை. அனுமதி கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன்.இந்த எதிர்ப்புக்களை எல்லாம் சமாளித்து விட்டு சில நாட்களின் பின்னர் அவரை சந்தித்துப் பார்ப்போம் என்று அவர் புன்னகையுடன் கூறினார்.







