Breaking News

அரசாங்கம் காலத்தை நீடிப்பது உண்மையே : சுரேஸ்

பொறுப்புக்கூறல் உட்பட தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியத்தையே அரங்கேற்றி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்புச் செய்கிறது என்ற குற்றச்சாட்டினையும் மங்கள சமரவீர முற்றாக மறுதலித்திருந்தார்.

எனினும், மங்கள சமரவீரவின் இந்தக் கருத்துக்களில் உண்மையில்லை என்று கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈபிஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஸ்ரீலங்கா அரசாங்கம் காலத்தை இழுத்தடித்து வருகின்றது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை அமைச்சர் மங்கள அறிந்ததாலேயே இவ்வாறான அறிவிப்பை விடுக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.