Breaking News

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்கள் - நீதி கிடைக்குமா?



முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்களின் விடயத்தில் உண்மையான நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மீனவர் அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் மீனவர் அமைப்புக்கள் மேலும் தெரிவிக்கையில் ,

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அத்துமீறிய வகையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் சட்டவிரோதமான உள் நுளைவது மட்டுமன்று தடைசெய்யப்பட்ட தொழில்முறகளையும் மேற்கொள்வதனால் உள்ளூர் மீனவர்கள் அதிகம் பாதிப்படைவதோடு தொடர்ந்தும் சிங்கள மயமாக்கல் முயற்சி இடம்பெறுவதாக மாவட்ட மீனவர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டினர்.

இதன் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் மீன்பிடி அமைச்சர் மாவட்டத்திற்கு வருகை தந்து இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்து இவற்றினை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓர் குழுவினை நியமித்தது மட்டுமன்றி இனிவரும் காலங்களில் தென்னிலங்கைப் படகுகள் இம் மாவட்டத்திற்குள் வர அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்துச் சென்றார்.

இருப்பினும் குழு ஒரு தடவையேனும் கூடாத நிலையில் இந்த மாதம் ஆரம்பத்தில் கடற்றொழில் அமைச்சில் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு ம் அமைச்சரே தலமை தாங்கினார் அப்போது மாவட்டத்தின் நிலமை தொடர்பில் சர்ச்சைக்குரிய வசணத்தை இராணுவத்தினர் கூறியபோது பலரும் தடுமாறிய வேளையில் பிரதேச செயலாளர் அணைத்து விடயங்களையும் ஆதார பூர்வமாக கூறியதோடு மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் இனிமேல் மேலதிக படகுகள் முல்லைத்தீவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என உத்தரவாத மளித்த நிலையில் 113 படகுகள் புதிதாக வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனை செவிமடுத்த அமைச்சரே உடனடியாக மற்றுமோர் குழுவினை தெரிவு செய்து உடன் ஆராய்ந்து இரு மாதகாலத்தில் தீர்வினைப்பெற அறிக்கை சமர்ப்பியுங்கள் என்றார்.

இதற்கான கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்திற்கு மீனவர் அமைப்புக்களும் கடற்படையினர் ஆகியோர் சென்றிருந்தனர். இருப்பினும் பிரதேச செயலாளருக்காக மாவட்டத்தின் மேலதிக செயலாளரே பங்கு கொண்டிருந்தார். மேலதிக அரச அதிபர் கடமை உணர்வானவராக இருந்தபோதிலும் இந்த விடயம் தொடர்பில் பூரண தகவல்கள் ஏது மற்றவர்.

அத்தோடு எமது பிரதேச செயலாளரைப் பொறுத்தவரையில் கடமைக்கும் அப்பால் பிறப்பாலும் அயல் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்தவர் என்பதனால் இவ் விடயம் தொடர்பில் பூரண விளக்கம் உடையவர் என்ற காரணத்திற்காக வேண்டுமென்றே திட்டமிட்ட வகையில் பிரதேசே செயலாளர் தடுக்கப்பட்டதாகவே கருதுகின்றோம். எனத்தெரிவித்தனர்.

இவ்வாறு மீனவர் அமைப்புக்கள் தெரிவிப்பது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த குழுவில் தொடர்ந்தும் பிரதேச செயலாளரே அங்கம் வகிக்கின்றார் இருப்பினும் இன்று கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கினைப்புக் குழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளமையினாலே மேலதிக அரச அதிபர் அனுப்பி வைக்கப்பட்டார் எனத் தெரிவித்தார்.

இருப்பினும் இன்று இடம்பெறவிருந்த ஒருங்கினைப்புக் குழுக் கூட்டமானது இணைத்தலைவர்களில் ஒருவர் இன்மை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.