Breaking News

ஜனாதிபதி என்பதை நிறூபித்துகாட்டுங்கள்; விமல் சவால்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம் இம்மாதம் 31 ஆம் திகதி முற்றுப்பெறவுள்ள நிலையில் அவரை குறித்த பதவியில் மீண்டும் அமர்த்தாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை மைத்திரி உணர்த்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவர் மத்திய ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் குறித்த பதவிக்கு தகுதியானவர் அல்லவென குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பிரதமரின் விருப்பத்தின் பேரிலேயே அவர் பதவியில் நீடிக்கின்றார் என்றும் மறைமுகமாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிறந்த தருணம். மீண்டும் ஒரு முறை அரஜுன் மகேந்திரனை பதவியிலமர்த்தாவண்ணம் பாரத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாத பட்சததில் அவரை ஜனாதிபதி என்று ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.