Breaking News

பூகோள அமைதிச் சுட்டி – 18 இடங்கள் முன்னேறியது இலங்கை

பூகோள அமைதிச் சுட்டியில், இலங்கை ஒரே ஆண்டில் 18 இடங்கள் முன்னேறி, 97 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், பூகோள அமைதிச் சுட்டி-2016 (Global Peace Index) என்ற தரவரிசைப் பட்டியலிலேயே சிறிலங்கா 97ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.


163 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலங்கை 18 இடங்கள் முன்னேறியிருக்கிறது.

இந்தப் பட்டியலில், மிகவும் அமைதியான நாடாக- ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து டென்மார்க், ஒஸ்ரியா ஆகிய நாடுகள் உள்ளன கடைசி இடத்தில் சிரியா உள்ளது. தென் சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் கடைசி வரிசையில் உள்ளன.

கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் முன்னேறியுள்ள இந்தியா 141 ஆவது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில், பூட்டான், 13ஆவது இடத்திலும், நேபாளம், 78 ஆவது இடத்திலும், பங்களாதேஸ், 83ஆவது இடத்திலும்,  பாகிஸ்தான் 153 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 160ஆவது இடத்திலும் உள்ளன.