Breaking News

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் எனக் கூறியவர் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின்



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைது செய்யுமாறு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்தாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நேற்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்றது. சட்ட சபையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘போரின்போது பொதுமக்கள் உயிரிழப்பது இயல்புதான் எனக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் ஜெயலலிதா’ என தெரிவித்துள்ளார்.