நல்லாட்சியிலும் ஊடக சுதந்திரம் இல்லை : கூட்டமைப்பு குற்றச்சாட்டு
கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்றே நல்லாட்சியிலும் ஊடக சுதந்திரம் முழுமையாக வழங்கப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கடந்த ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளர் ஊடகங்கள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆட்சியில் பிரயோகிக்கப்பட்ட அதிகாரப் பலம், பணப்பலம் என்பன புதிய ஆட்சியிலும் தொடர்வதாக சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், ஊடகவியலாளர்களை அடக்கியாளுகின்ற தன்மையை இது காட்டுகின்றதாகவும் குறிப்பிட்டார்.








