அரசியல் கைதிகளின் விடுதலை : ஐ.நா கொழும்பு அலுவலகத்திற்கு மகஜர்
நீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கம் இந்த மகஜரை இன்று வியாழக்கிழமை கையளிக்கவிருப்பதாக அதன் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைதிகள் கைவிட்டிருந்தனர்.
எனினும் அவ்வாறான குற்றப்பத்திரிகை எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்று தகவல்க்ள தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே ஐ.நா கொழும்பு அலுவலகத்தில் இன்றைய தினம் குறித்த மகஜர் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








