Breaking News

பாடசாலை மாணவியை காணவில்லை : விசாரணை துரிதம்



யாழ்.சூராவத்தை சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த, க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை காணவில்லையென, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயராஜா சுகந்தினி (வயது – 16) என்ற குறித்த மாணவி, சுன்னாகம் மயிலணி பகுதிக்கு மாலை நேர வகுப்பிற்குச் சென்று, நேற்று (திங்கட்கிழமை) இரவாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் மாணவியின் பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவி தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்காத நிலையில், சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.