பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தின் அடாவடித்தனம் - யாழ்.பல்கலை சமூகம் ஆழ்ந்த கவலை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய வளாகத்தில் உள்ள பயன்தரும் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்துமாறு யாழ் பல்கலைக்கழக சமூகம்கேட்டுக்கொண்டுள்ளது.
பலா,தென்னை,வேம்பு ஆகிய மரங்கள் நீண்ட காலமாக காணப்பட்ட நிலையில்சட்டவிரோதமான முறையில் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தன்னிச்சையாக மரங்களை வெட்டி வருவதாக யாழ் பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடு கடந்த மூன்ற நாட்களாக இடம்பெற்று வருவதுடன் . இந்த மரங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபர், மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது