இராணுவத்தின் மனநிலை குறித்து மஹிந்த கவலை!
கொஸ்கம, சாலாவ சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் போது, இராணுவத்தின் உயிரோட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இராணுவத்தின் மனநிலை தற்பொழுது பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








