Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வடக்கு முதல்வருக்கு எதிராக சதித்தட்டம்!



வட மாகாண சபையின் முதலமைசர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சில உறுப்பினர்கள் சதித் திட்டங்களை தீட்டி வருவதாக மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு சலுகைகளைப் பெற்றுத் தருவதாக அவர்கள் பேரம் பேசி வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத சில மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்புடன் இவர்கள் செயற்பட்டு வருவதாகவும், இவர்களின் சிபாரிசுகளை சில உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான உறுப்பினர்கள் சிலரே மாகாண சபை அமர்வுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்..