Breaking News

20 ‪செயற்கைக்‬ கோளுடன் விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ‪PSLV‬-C34 ரொக்கட்...



ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை (9.26 மணியளவில்) 20 செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில் முக்கிய செயற்கைக்கோள் இஸ்ரோவின் கார்டோசாட்-2, வரைபடம், கடல்வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மற்றைய செயற்கைக்கோள்களில் அமெரிக்கா(13), கனடா(2), ஜெர்மனி(1), இந்தோனேசியா(1), சத்யபாமா பல்கலை(1), புனே இன்ஜினியரிங் கல்லூரி(1) ஆகியவை அடங்கும்.

இந்தோனேசியாவின் லெபன்-ஏ3 (120 கி), ஜெர்மனியின் பிரோஸ் (130 கி), கனடாவின் எம்3எம்சாட் (85கி), ஜிஎச்ஜிசாட்-டி (25.5 கி), அமெரிக்காவின் ஸ்கைசாட் ஜென்2-1 (110கி), டவ் வகையை சேர்ந்த 12 செயற்கைக்கோள்கள் (ஒவ்வொன்றும் 4.7 கி) என 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்த செயற்கை கோளின் எடை 727.5 கிலோ ஆகும். பூமியில் இருந்து 505 கி.மீ தொலைவில் செயற்கை கோள் நிலைநிறுத்தப்படும். இதில், 986 வாட் திறன் கொண்ட 2 பட்டரிகள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும்