Breaking News

இயக்கச்சி முதல் தாண்டிக்குளம் வரை என்ன நடைபெறுகிறது?


தமிழர்களின் தியாகமிகு ஆயுதப் போராட்டத்திற்கும்
A9 சாலைக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு. இந்த சாலை மீட்புக்காக இழந்த உயிர்களின் எண்ணிக்கை எங்கும் கணக்கு வைக்கப்படவில்லை. அவ்வளவுக்கு இச்சாலையை தமிழர்கள் குருதியால் கழுவியிருக்கின்றனர்.இப்போது இச்சாலையில் எத்தடங்களும் இல்லை. மின்னலாகக் கிழிக்கும் வாகனங்களில் வெட்டுண்டாமல் உங்களால் கடக்க முடியுமாயின், A9 இல் பயணிப்பது உல்லாசமிக்கதாக இருக்கின்றது. சீனா தன் பூகோள அதிகார அந்தஸ்திற்காக மெழுகி வைத்திருக்கும் சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.


இப்போது இச்சாலை தமிழர்களுக்கு அதிகளவு வருமானத்தைத் தரக்கூடும் என்றே இதனூடாகப் பயணித்துச் செல்பவர்கள் நினைக்கக்கூடும். 24 மணிநேரமும் இயங்கு நிலையில் இருக்கும் இச்சாலையில் பெருமளவிலான மக்கள் பயணிக்கின்றனர். நாட்டின் தென் பாகத்திலிருந்து வடக்கிற்கு புதினம் பார்க்க படையெடுப்பவர்களும், வடக்கிலிருந்து தெற்கிற்கு பயணிப்பவர்களும், வெளிநாட்டவரும் இதனுள் அடக்கம். இவ்வாறு பயணிப்பவர்கள் சாலையோரக் கடைகளில் தரித்து நின்று உணவருந்தினாலே, இங்கு வசிக்கும் தமிழர்கள் அதிக வருமானத்தைப் பெறமுடியும் எனவும் நினைக்கக்கூடும்.
ஆனால் அந்த வருமானத்தை இராணுவம் தட்டிப் பறித்துக்கொள்ளும் செய்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சாலையில் தமிழர்கள் கோயில் உண்டியலுக்கு பணம் சேர்த்துக்கொடுக்கவும், கச்சான் விற்கவும், பிச்சையெடுக்கவுமே வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. தாண்டிக்குளத்தில் தொடங்கி இயக்கச்சி வரையில் நீளும் சாலை முழுவதும் இராணுவத்தின் உணவுக்கடைகள் போவோர் வருவோரை லாவகமாக வரவேற்கின்றன. அதனை Story map எனும் புதிய வலைதள உதவியுடன் துளியம் இணையதளம் அறிக்கையிடுகின்றது.
(இதனூடாக பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் பேரூந்தும் இந்த இடங்களில் தரித்து செல்வதற்குரிய ஒழுங்குகளும் நடத்துனர் சாரதிகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது பழைய செய்தி)
பதிவை கீழே உள்ள திரை ஊடாக பார்க்கலாம்.