Breaking News

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இலங்கைக்கு 9 மாத அவகாசம்



இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை களுக்காக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய ஹைப்ரிட் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைன் இலங்கை அரசாங்கத்துக்கு 9 மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சர்வதேச நீதிமன்றத்தை நிறுவுவதற்கான அழுத்தத்தை நாட்டுக்கு வெளியில் தமிழீழம் எனும் அமைப்பு அனுப்பிய 6 சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழு ஆணையாளருக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த 9 மாத காலத்துக்குள் இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தை அமைத்து, அதில் வழக்கு விசாரணைகளை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பது தொடர்பில், மனித உரிமைகள் ஆணையாளர் 2017 மார்ச் மாத மாநாட்டில் அறிக்கையொன்றை முன்வைக்குமாறு கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.