போர்க்குற்ற விசாரணைகள் தனித்தனி நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும்!
இறுதிக்கட்ட யுத்தத்தின் போதான போர்க்குற்ற விசாரணைகள் தனித்தனி நீதிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியானது சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு, சில குற்றச் செயல்களை சர்வதேச கலப்பு நீதிமன்றத்தில் விசாரிப்பது வசதியளிக்காது.
அதேவேளை, அனைத்து குற்றச்செயல்களையும் உள்ளக நீதிமன்றத்தில் விசாரிப்பது என்பதும் சாத்தியமானதாக அமையாது.
எனவே, பிரச்சினையற்ற சில விசாரணைகள் தவிர்ந்த ஏனையவை விசாரணைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதை ஓர் விசேட அமைப்பு மூலம் தெரிவுசெய்து அந்தந்த நீதிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








