Breaking News

துருக்கியில் ஆட்சியை கவிழ்க்க இராணுவம் முயற்சி: 42 பேர் பலி



துருக்கியின் தலைநகர் அங்காராவில் 17 பொலிஸார் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சித்த 13 இராணுவத்தினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

துருக்கியின் ஆட்சியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளபோதும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துருக்கி பிரதமர் Binali Yildirim தெரிவித்துள்ளார்.

துருக்கியின் அரச தொலைக்காட்சியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள இராணுவம், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மற்றும் இராணு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி டையிப் எர்டோகன் விடுமுறையைக் கழிப்பதற்காக மாமரிஸ் நகருக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த இராணுவ சதிமுயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ரக்சிம் சதுக்கத்தில் பாரிய இரண்டு வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கரா நாடாளுமன்ற கட்டத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு மறைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த இராணுவச்சதி செயற்பாட்டிற்கு தலைமை வகிப்பது யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

இராணுவத்தின் நடவடிக்கையால் துருக்கி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுளள்துடன், போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்கள் துருக்கி தலைநகரின் பறந்துகொண்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

துருக்கியிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து, ஜனநாயக ரீதியிலான ஆட்சியை நாட்டில் நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்துள்ள விசேட அறிவித்தலில் தெரிவித்ததுள்ளார்.

இராணுவத்தின் சதி நடவடிக்கையை தடுக்க வீதிகளில் இறங்கி எதிர்ப்பை வெளியிடுமாறு துருக்கிய ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.