யாழ் பல்கலைக்கு விரைவில் சிங்கள துணைவேந்தர்(காணொளி)
யாழ் பல்கலைக்கழகத்தின் சிங்கள மயமாக்கல்
படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக சட்டபீட மாணவர் ஒன்றிய தலைவரும் பிரபல குற்றவியல் வளக்கறிஞ்ஞருமான திரு சுகாஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யாழ் பல்கலைக்கழக சட்டக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது 19 தமிழ் மாணவர்களும் 6 முஸ்லீம் மாணவர்களுமாக இருந்தபோதும் 5ஆண்டுகளின் பின்னர் அது 50மாணவர்களில் அரைவாசிப்பேருக்கு குறைவான தமிழ் மாணவர்களை கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர் நிலைமை இவ்வாறு தொடருமானால் விரைவில் மாணவர் சங்கத்தை மட்டுமல்ல யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும். எனவே பல்கலைக்கழக நிர்வாகிகள் தமது சொந்த பதவி உயர்வுகளை கருதி இவ்வாறான ஆக்கிரமிப்புக்களுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்களின் தனித்துவங்களைப் பிரதிபலிக்கின்ற அடையாளமாக விளங்குகின்ற யாழ் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் தனித்துவத்தை இழக்கும் நிலை உருவாக்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மகிந்த ராஜபக்சே தமிழ்மக்களை துடிக்க துடிக்க தூக்கிலிட்டு கொலைசெய்பவர் என்றும் ரணில் மைத்திரி கூட்டு சாவதே தெரியாமல் சஞ்சூட்டிக்கொலை செய்துவருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தோடு பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிர்வாகத் திறன் இன்மையும் நிர்வாகத்தில் இருக்கின்ற சிலரின் தனிப்பட்ட முன்னேற்றம் தொடர்பான கரிசனைகளுமே. இந்நிலை இப்படியே தொடர அனுமதிப்போமாயின் யாழ் பல்கலைக்கழகத்தில் எமது அடையாளங்ளை இழக்க நேரிடும்.
ஆகவே, யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினை சரியான வழித் தடத்தில் பயணிக்கச் செய்யும் வகையிலான அழுத்தங்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் பழைய மாணவர் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








