Breaking News

சரிகிறது மஹிந்த அணி..!!



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன, மஹிந்த ராஜபக்ஷ அணியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தனது சகோதரரான எஸ்.எம்.ரஞ்சித்திற்கு வழங்குமாறு எஸ்.எம்.சந்திரசேன, ஐக்கிய தேசியக் கட்சியிடம் நிபந்தனை முன்வைத்துள்ளார்.

அதன்படி, பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுடன் விரைவில் சந்திரசேன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவும் மஹிந்த அணியில் இருந்து விலகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.