கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நண்பகல் அனுராதபுர, கலென்பிந்துனுவெவ கூட்டத்திலும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய நாள் நிகழ்வுகள் உதுவன் கந்தை பிரதேசத்தில் ஆரம்பமாகும் போது மஹிந்த ராஜபக்ஷ அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். பின்னர், பாதயாத்திரையின் இடையில் திடீரென அவர் தலைமறைவாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.