நடுவானில் காணாமல் போன இந்திய விமானப்படை விமானம்
வங்காள விரிகுடா கடலுக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது, இன்று காலை காணாமல் போனதாக விமானப்படை மக்கள் தொடர்பு அதிகாரி விங் கமாண்டர் அனுபம் பானர்ஜி பிபிசியிடம் தெரிவித்தார்.
ஏன்டனோவ் 32 ரக போக்குவரத்து விமானம், சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. அந்தமான் நிகோபார் தீவுகளின்
போர்ட் பிளேருக்கு பகல் 11.30 மணிக்குச் சென்றடைய வேண்டிய அந்த விமானம், அங்கு சென்று சேரவில்லை. எந்த நேரத்தில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
விமானத்தைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்திய விமானப் படையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏன்டனோவ் 32 ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன
 

 
 
 
 
 
 











