மஹிந்த அணியுடன் ஜனாதிபதி மைத்திரி பேச்சுவார்த்தை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திபொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இச்சந்திப்பானது நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிரணிக்குள் ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவி வருகின்ற நிலையில், இச்சந்திப்பின்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் மாபெரும் நடைபவனியொன்றை நடத்துவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி இவ்விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.