Breaking News

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தவர் மூவர் படுகொலை



மட்டக்களப்பு வெள்ளாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

25 வயதுடைய பெண், அவரின் தந்தை மற்றும் அப் பெண்ணின் 18 மாத மகள் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரே இந்த படுகொலைகளை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது மகள் ஆகியோரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.