அரசியல்வாதிகளை எச்சரிக்கும் இளஞ்செழியன்
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் பரப்புரையின்போது பொலிஸ் அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய வழக்கில் சந்தேக நபருக்கு நேற்று நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்கியுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் குமாரு சவர்வானந்தன் என்ற அப்போதைய வேட்பாளர் நான்கு மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வந்தார்.
ஐம்பதாயிரம் ரூபா அபராதம் மற்றும், 2 சரீரப் பிணைகளின் அடிப்படையிலேயே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் சாட்சிகளின் தலையீடு இருப்பின் பிணை ரத்துச் செய்யப்படும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் தீர்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் ஜனநாயகம் பேசிக்கொண்டு, மோதல்களில் ஈடுபட்டு, துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இலகுவில் பிணை வழங்கப்படக் கூடாது. அரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை அனுமதிக்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்திருந்தார்.








