Breaking News

வட பகுதிக்கான பொருளாதார மையம் தொடர்பான சர்ச்சைக்கு இறுதித் தீர்மானம்



வட பகுதிக்கான பொருளாதார மையம் தொடர்பான சர்ச்சைக்கு தாண்டிக்குளம் மற்றும் ஓமந்தை ஆகிய இரு இடங்களிலும் அமைக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,

வடக்கிற்கான ஓர் பொருளாதார மையத்தினை வவுனியாவில் அமைக்க என்னை அதற்கான இடத்தேர்வில் நீண்ட சர்ச்சை நிலவியது. இது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் தலமையில் ஒரு அணியினர் ஓமந்தையில் அமைய வேண்டும் என கருத மற்றுமோர் அணியினர் தாண்டிக்குளத்தில் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தினர்.

இந் நிலையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்பிரகாரம் இறுதித் தீர்மானக தாண்டிக்குளம் மற்றும் ஓமந்தை ஆகிய இரு பிரதேசங்களிலும் இரு பொருளாதார மையங்களை அமைக்க அனுமதி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இதன் சர்ச்சை தற்போது புதிய வடிவத்தினை எட்டியுள்ளது. ஒரே மாவட்டத்தில் சுமார் 6 கிலோ மீற்றர் இடைவெளியில் இரு மையங்கள் தேவைதானா என்ற கேள்வியும் எழுவதோடு தாண்டிக்குளம் மற்றும் மாங்குளம் பிரதேசங்களில் அமைவதன் மூலம் இரு மையங்களினதும் நன்மையை ஈட்டமுடியும் எனவும் கூறப்படுகின்றது.