Breaking News

மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி அருகே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 4 பேர் பலி



சவுதி அரேபியாவின் மதீனா நகரில் காணப்படும் முஸ்லிம் மக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசளுக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

மஸ்ஜிதுன் நபவி அருகே பாதுகாப்பு படை வீரர்கள் சிலர் நோன்பு திறந்துகொண்டு இருக்கும் வேளை அவர்களுடன் நோன்பு திறக்க இணைத்துக்கொண்ட தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் 4 படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பள்ளிவாசலிலேயே முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதியின் கிழக்கு பகுதி நகரான கத்திஃப் நகரில் உள்ள ஒரு ஷியா மசூதிக்கு அருகேயும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மஹ்ரிப் தொழுகையின் போது இடம்பெற்ற குறித்த தாக்குதலில் குண்டுதாரி மட்டுமே கொல்லப்பட்டார்.

அதேவேளை நேற்று திங்கட்கிழமை காலை ஜித்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகேயும் தற்கொலை குண்டு தாக்குதல் ஒரு நடைபெற்றது. அதில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.