தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்!
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் தொனிப்பொருளில் மன்னாரில் கருத்து பகிர்வுறவாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் நோக்கிற்கு அமைவாக குறித்த கருத்து பகிர்வுறவாடல் இடம்பெறவுள்ளது.
இதற்கு தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர், வடகிழக்கு ஆயர்கள், மத குருமார்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் பத்திரிகை ஆசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனும் சிந்தனைக்குளாமினரை ஒருங்கிணைத்து ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம’; எனும் மகுடத்தில் கருத்தாய்வு நிலை கருத்துப்பகிர்வுறவாடல் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவித்துள்ளார்.








